சீனா அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது அமெரிக்கா எச்சரிக்கை.
ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என பென்டகன் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சீனாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம் என்றும், 2030க்குள் 1,000 ஆக உயரலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.
மேலும் தைவானின் நிலை குறித்த சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அறிக்கை சீனாவுடனான வெளிப்படையான மோதலை பரிந்துரைக்கவில்லை, ஆனால் அது போர்க்களம் – காற்று, நிலம், கடல், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகிய அனைத்து களங்களிலும் அமெரிக்காவிற்கு சவால் விடும் சீன இராணுவத்தின் நோக்கத்தை சுட்டி காட்டுகிறது.