கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளாா்.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்கொட்லாந்து சென்றிருந்தஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று (04) காலை நாடு திரும்பியுள்ளாா்.
எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே. – 650 என்ற விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளாா்.