மரமுந்திரிகை கன்றுகள் நடும் நிகழ்வு.
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவின் கஜுவத்தை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் திட்டத்தின்கீழ் அப்பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக மரமுந்திரிகை கன்றுகள் நடும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தலைமையில் நடைபெற்றது.
இப்பிரதேசத்தில் மரமுந்திரிகை செய்கைக்காக 200 ஏக்கர் அளவிலான பிரதேசம் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மரமுந்திரிகை செய்யப்படுவதன் மூலமாக மரமுந்திரிகை உற்பத்தி அளவை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.அத்துடன் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக அமையும்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கபில அத்துகோரல, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம் .சி .சமரக்கோன், பிரதேச அரசியல் தலைமைகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.