ஸ்மார்ட் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தயாரித்த எதிரி விமானதளங்களை அழிக்கும் ஸ்மார்ட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளது.
SAAW – Smart Anti Airfield Weapon அதாவது ஸ்மார்ட் விமானதள எதிர்ப்பு ஏவுகணை என பெயர் கொண்ட இது சுமார் 100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை இந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அன்றும், நவம்பர் 3 ஆம் தேதி அன்றும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்த முறை நடைபெற்ற சோதனையில் செயற்கைகோள் வழிகாட்டி அமைப்பு மற்றும் ஒரு அதிநவீன மின்னனு தொழில்நுட்ப அமைப்பு ஆகியவற்றை ஏவுகணையில் இணைத்து சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையானது இதுவரை ஒரு டஜன் முறை சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என தெரிகிறது, ஏற்கனவே ஜாகுவார் மற்றும் ஹாக் ஆகிய விமானங்களில் இது வெற்றிகரமாக இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.