வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள இனி உரிமையாளரின் அனுமதி தேவையில்லை!
“வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை. இந்தக் காரணங்களால் இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாமல் போனவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.”
இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு சாதாரண பதிவு முகவரியில் வாக்கு உரிமையாளராகப் பதிவு செய்துகொள்வதற்காகத் தகுதியுடைய அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை இருக்கின்றது.
வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதற்காக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு சாதாரண பதிவு மாத்திரம் போதுமானது. சொத்துரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.
வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் ஏனைய தகுதிகளைப் பூரணப்படுத்தி இருந்தால், அவர் சாதாரண முகவரியில் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள முடியும். அதற்காக வீட்டு உரிமையாளர்களின் விருப்பம் அல்லது இணக்கம் தேவையில்லை.
பிரஜை ஒருவருக்கு விட்டுக்கொடுக்க முடியாத இறையாண்மை அதிகாரத்துக்கு வாக்களிக்கும் அதிகாரமும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. வாக்களிக்கும் அதிகாரத்தைச் செயற்படுத்துவதற்கு வாக்குரிமை பெயர்ப்பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதற்காகப் பிரஜைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவது நீதிமன்றத்தால் தண்டம் அல்லது சிறைப்படுத்தல் அல்லது இந்த இரண்டுக்கும் கீழ்ப்படிய வேண்டிய குற்றமாகும்.
வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் வாக்காளராகப் பதிவு செய்துகொள்வது, பிரஜைகளின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமாகும்.
இவ்வாறு பதிவு செய்வது சொத்து உரிமை அல்லது நிரந்தர பதிவை உறுதிப்படுத்துவதற்கு அல்ல என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இவ்வாறான பிரச்சினை காரணமாக வாக்காளாராகப் பதிவு செய்து கொள்வதற்கு முடியாமல்போனவர்கள் யாராவது இருந்தால், 2021.11.17ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உங்களது கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.
உங்களுக்குத் தேவையான உரிமை கோரல் பத்திரங்கள் அனைத்து கிராம சேவகர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாகாண காரியாலயங்கள் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோன்று www.elections.gov.lk என்ற எமது இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் 011 2860031 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்” என்றுள்ளது.