பெண்களுக்காக இலவச தொலைபேசிச் சேவை அறிமுகம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைய, பெண்களுக்காக “1938” என்ற இலவச தொலைபேசிச் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த “1938” என்ற தொலைபேசிச் சேவை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில், பத்தரமுல்லை செத்சிறிபாய பகுதியில், இடம்பெற்றுள்ளது.
இந்தச் சேவை 24 மணித்தியாலங்களும் இயங்கும் என்றும், இந்தச் சேவையின் மூலம், நாட்டின் எந்தப் பாகத்திலிருந்தும் கட்டணமின்றி “1938” என்ற இலக்கம் ஊடாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இடம்பெறும் துன்புறுத்தல்கள், பாலியல் தொல்லைகள் போன்ற விடயங்கள் தொடர்பில், குறித்த இலக்கத்தின் ஊடாகத் தெரியப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.