தலதா மாளிகை வலயத்துக்கு ட்ரோன் கெமராவை அனுப்பிய பங்களாதஷ் பிரஜை கைது!
தலதா மாளிகைக்கு சொந்தமான உயர் பாதுகாப்பு வலயத்துக்கு ட்ரோன் கெமராவை அனுப்பி வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த பங்களாதேஷ் பிரஜையொருவர், தலதா மாளிகையின் பொலிஸ் பிரிவினரால் நேற்று சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
தன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் யூ டியூப் செனலுக்காக குறித்த காணொளியைப் பதிவு செய்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு சொந்தமாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை பயன்படுத்துவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கெமரா,கையடக்க தொலைபேசி, கெமரா மற்றும் சந்தேகநபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய சுற்றுலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.