தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல்.

33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் 33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவிற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளான பங்குபற்றுபவர்களின் தங்குமிடவசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் ஏற்பாடுகள், கொவிட்-19 சுகாதார வசதிக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர், மாநகர சபை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், இராணுவ பொறுப்பதிகாரிகள், பொலிஸ்தரப்பினர், அரச அதிகாரிகள், இளைஞர் விளையாட்டுக் கழக அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.