அசேதன பசளை மாஃபியா தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இன்றைய தினம் வெல்லாவெளிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் செல்கையில் பல விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிட்டனர் அதன் போது விவசாயிகள் அநேகமானோர் மறைமுகமாக விற்கப்படும் அசேதன பசளைகளை கூடுதலான விலைகொடுத்து கிட்டத்தட்ட 10,000 ரூபாய்கள் வாங்கி பயன்படுத்துகின்றார்கள்.
சேதன பசளை பாவிப்பது என்பது குறைவாகவே காணப்படுகின்றது வறிய விவசாயிகளே கூடுதலாக பயன்படுத்துகின்றனர் அவர்களினால் தங்கள் பயிருக்கு கூடுதலான பணம் கொடுத்து அசேதன பசளை இட முடியாமல் உள்ளனர்.
இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இவ்வாறான செயல்பாடுகளே நடைபெறுகின்றது. ஜனாதிபதியின் திட்டம் மூலம் மணல் மாஃபியா போல் அசேதன பசளை மாஃபியா தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் அரிசியின் விலையானது கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இதனால் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கப்போவது எமது மக்களும் விவசாயிகளுமே.