வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் அதிக மழை பெய்யக்கூடும்.
எதிவரும் 11ஆம் திகதிவரை இலங்கையில்
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகும் சாத்தியம் உள்ளது என இம்மாதம் 03ஆம் திகதி இதே பதிவில் நான் கூறியிருந்தேன்.
இந்த காற்று சுழற்சியானது ஏற்கனவே கூறப்பட்ட அதே பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து 3.1km இற்கு மேலாக உருவாகியுள்ளது.
இதனை இன்று (06.11.2021) இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்ட இந்த தகவலையும் இத்துடன் கீழே பதிவிடுகிறேன்.
அத்துடன் இது அடுத்த வரும் 48 மணித்தியாலங்களில் தாழமுக்க வளையமாக வலுவடையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த காற்று சுழற்சியானது இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி சற்று வேகமாக நெருங்கி வரும் என தற்போதும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணத்தினால் நாளை (07.11.2021) முதல் பெரும்பாலும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.