புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்து வைப்பு-!

தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது.
சியோமோபாலி வங்ஷ மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் காரக சங்க சபிக ஜயசுந்தர புராதன விகாரையின் விகாராதிபதி விதாரன்தெனியே ஞானரதன தேரர் புதிய தாதுகோபுரத்தை திறந்துவைத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தாதுகோபுரத்தில் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்.