தாரக் சின்ஹாவிற்கு மறைவிற்கு ரிஷப் பந்த் உருக்கம்!

இந்திய கிரிக்கெட் அணிக்குப் பல முக்கிய நட்சத்திர வீரர்களை அளித்தவர் தாரக் சின்ஹா. இந்திய அணிக்கும் முதல் தர கிரிக்கெட் போட்டிக்கும் அதிக வீரர்களை அளித்தவர் என்ற சிறப்பை பெற்றவர் தாரக் சின்ஹா.
இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை 3 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ரிஷப் பந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வழிகாட்டி, பயிற்சியாளர், ஊக்குவிப்பாளர், எனது மிகப்பெரிய விமர்சகர் மற்றும் எனது மிகப்பெரிய ரசிகர். உங்கள் மகனைப் போல் நீங்கள் என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் இழப்பு எனக்குப் பேரிழப்பு. நான் மைதானத்திற்குள் வரும் போதெல்லாம் எப்போதும் நீங்கள் என்னுடன் இருப்பீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள் தாரக் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.