சென்னை மழை: தொலைபேசி எண்கள் அறிவிப்பு… வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம்!
சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆலந்தூர், பழவந்தாங்கல்,
விமான நிலையம், பல்லாவரம்,தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. அளவை தாண்டி மழை பெய்துள்ளது.
இதனால் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளும் மற்றும் வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.வீடுகளில் மழை நீர் சுழ்ந்ததால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், மதுரைக்கு 2 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. 1913, 04425619206, 04425619207, 04425619208, ஆகிய எண்களை அழைத்தும் , 9445477205 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது.