கேரளாவில் விற்பனை ஆகாத லொட்டரி சீட்டு மூலம் கோடீஸ்வரர் ஆகிய நபர்!!
கேரளாவில் விற்பனை ஆகாத லொட்டரி சீட்டு மூலம் நபர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
கோட்டயத்தை சேர்ந்தவர் கே ஜே சஜிமோன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தை காப்பாற்ற சஜிமோன் லொட்டரி டிக்கெட்களை விற்க தொடங்கினார். பல கிலோ மீட்டருக்கு சைக்கிளில் சென்று லொட்டரி டிக்கெட்களை விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் இருந்த லொட்டரி டிக்கெட்களில் 4 டிக்கெட்கள் விற்பனையாகவில்லை. ஆனால் அதில் ஒரு டிக்கெட் தான் ஜாக்பாட்டாக மாறி சஜிமோன் வாழ்வையே மாற்றியுள்ளது.
ஆம், விற்காமல் மீதம் இருந்த ஒரு டிக்கெட்டுக்கு ரூ 2 கோடி (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது. இது குறித்து சஜிமோன் கூறுகையில், தீபாவளி நாளில் அனைத்து டிக்கெட்டையும் விற்க வேண்டும் என நினைத்த நிலையில் 4 டிக்கெட்கள் விற்கவில்லை.
ஆனால் அது தான் என்னை பணக்காரனாக ஆக்கியுள்ளது. இந்த பணத்தை வைத்து என் வீட்டை முதலில் சீரமைப்பேன், புதிய கிணறு கட்டுவேன், இதோடு என் இரண்டு பிள்ளைகளுக்காக செலவிடுவேன் என கூறியுள்ளார்.