வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாத்தறை, பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நமுனுகுலவத்தைப் பகுதியில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் பெயர், விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பிட்டபெத்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நமுனுகுலவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நடமாடும் சுற்றுலாப் பொலிஸார் இன்று சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் குறித்த நபரின் சடலம் கிடப்பதைப் பொலிஸார் கண்டுள்ளனர்.
இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.