24 மணிநேரத்தில் 45 பேர் சிக்கினர்!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் நேற்று இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.