ஆடை அணிந்து வீதியில் போக முடியவில்லை, மக்கள் விரட்டி அடிக்கின்றனர் : ஆளும் கட்சி எம்பி (Video)
நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் கட்சி பிரதிநிதிகள் ஆடை அணிந்து கொண்டு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை உள்ளதென விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணயின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாளை இந்த நிலைமை நாட்டுத் தலைவர்களுக்கும் ஏற்படக்கூடும் என அவர் கூறினார்.
விவசாயிகளின் போராட்டங்களில் எதிர்கட்சிகள் இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயம் எனவும் அனைத்து விவசாயிகளும் தாமான முன்வந்து போராட்டம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று தங்களால் வீதியில் இறங்கி பயணிக்க முடியவில்லை என்றும் கிராமங்களில் நல்லது கெட்டதுக்கு செல்ல முடியவில்லை எனவும் வாக்களித்த மக்களே தங்களை விரட்டியடிப்பதாகவும் நிமல் பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் சிலரது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் 69 லட்சம் மக்களுக்காக தனிப்பட்டு செயற்பட வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.