தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை தற்சமயம் திறப்பு.
தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையில் பெரிய கதவுகள் ஆறும், சிறிய கதவுகள் ஆறும் தற்சமயம் திறந்து விடப்பட்டுள்ளன.
ஆயினும் மழைநீர், கடலைச் சேர்வதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. கடல் மீதுள்ள தாழமுக்கம் காரணமான இயற்கைச் சமனிலையால், கதவுகளின் எதிர்ப்புறமுள்ள கடல்நீர் ஒரே மட்டத்தினை அடைந்துள்ளது.
‘கடல் நீர்மட்டம் குறைவடைந்த பிறகே, மழைநீர் வெளியேறும் வீதம் அதிகரிக்கும்’ என நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.