கொரோனா விழிப்புணர்வு ஆரம்ப நிகழ்வு.
தாய்த்தமிழ் பேரவையின் ஒழுங்கமைப்பில் அமரர் புஸ்பராசா.நற்பணிமன்றம்,, வனிதா ஜெயகாந்தன் அறக்கட்டளை,, சிவா அன்னதான அறக்கட்டளை ஆகிய சமூக அமைப்புகளின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில் முள்ளியவளை பிரதேசத்தில் 08. 11.2021 அன்று பி.பகல் 1.00 மணிக்கு தாய்த்தமிழ் பேரவையின் தலைவர் சி நாகேந்திரராசா (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மங்கள விளக்கினை முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு கே.விமலநாதன்,, முல்லைத்தீவு மாவட்டத்தின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி v.விஜிதரன்,, ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும் தாய்த்தமிழ் பேரவையின் ஆலோசகருமான வைத்தியகலாநிதி கை சுதர்சன்,, முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் திருமதி L.கேகிதா,, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள்,, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு க.விஜிந்தன்,, பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு தி.ரவீந்திரன்,, சி.லோகேஸ்வரன்,, கரைதுறைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் த.ஸ்ரீபுஸ்பநாதன் ,, தாய்த்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமாதான நீதவான் திரு நவநீதன்,, தாய்த்தமிழ் பேரவையின் பொருளாளர் திருமதி இ.சிவலோஜினி,, அமரர் புஸ்பராசா அவர்களின் உறவினரான திருமதி s . கார்த்திகா ஆகியோர் ஏற்றிவைத்தனர், வரவேற்புரையினை தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.ரூபன் நிகழ்தினார்.
தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்குமான ஈகைச்சுடரினை முள்ளியவளை பிரதேச மகளிர் பேரவையின் தலைவி திருமதி ச.ஜெயமாலா,, ஏற்றிவைக்க மலர்மாலையினை முல்லைத்தீவு பிரதேச தாய்தமிழ் மகளிர் பேரவையின் தலைவி திருமதி த.சுகன்ஜா அணிவித்தார்.
தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பணியினை முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திரு கே விமலநாதன் ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து விழிப்புணர்வு சிறப்பு உரைகளை முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,வைத்திய கலாநிதி v.விஜிதரன், வைத்தியகலாநிதி கை.சுதர்சன், பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன்,, தாய்த்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் த.நவநீதன் ஆகியோர் நிகழ்தினர்.
தொடர்ந்து மக்களுக்கான துண்டுப்பிரசுரங்கள், முகக்கவசங்கள்,, தொற்றுநீக்கி திரவங்கள் என்பன வழங்கி இப் பணி முன்னெடுக்கப்பட்டதோடு வாகன ஒலிபெருக்கி மூலம் கிராமங்களில் ஒலிபெருக்கப்பட்டதோடு, சுவரொட்டிகள்,, பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன இப் பணி தொடர்சியாக இரண்டு வாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.