மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு…

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (10) பிற்பகல் வரை நீடிக்கின்றது.

இதற்கமைய , பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.