இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பனை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலமர்வு.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பனை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சியுடனான வாழ்வாதார உபகரண உதவித்திட்டத்தினை வழங்குவதற்கான மூன்று நாட் செயலமர்வு!
USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், CDO நிறுவனத்தின் மேற்பார்வையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடு (SCORE) திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பனை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதாரஉபகரண உதவித்திட்டத்தினை வழங்குவதற்கான செயலமர்வு அண்மையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் அவர்களுக்கான தலைமைத்துவ விருத்தி மற்றும் தமக்கான தொழிலை அடையாளப்படுத்தி ஆரம்பித்து அபிவிருத்தி செய்தல் தொடர்பான மூன்று நாட்களை கொண்ட செயலமர்வு செஞ்சிலுவை சங்க மாநாட்டு மண்டபத்தில் இன்று(11) இடம்பெற்றுள்ளது.
குறித்த திட்டத்திற்காக இதுவரை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலமைந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளவர்களிலிருந்து நேர்முகத்தேர்வினூடாக 18வயது தொடக்கம் 29வயதுக்குட்பட்ட 40 இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தையல், மின்னியல், விவசாயம் துறைசார்ந்த பயிற்சிகளுடன் அவைசார்ந்த உபகரணங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.