உளுந்து, பயறு, இஞ்சி பயிர்செய்கைக்காக நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு, இஞ்சி பயிர்செய்கை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் நிதி ஒதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதிஒதுக்கீட்டின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்யகை பண்ணப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக இறக்குமதிகளைக் குறைத்து உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சின் விசேட வேலைத்திட்டத்திலிருந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்நிதிஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் வழிகாட்டலில் மாவட்ட விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களங்களின் பங்களிப்புடன் இத்திட்டம் இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக உளுந்து பயறு பயிர்ச்செய்கைத் திட்டத்தின்கீழ் 11மில்லியன் செலவில் 10 ஆயிரத்தி 760 கிலோகிராம் உளுந்து 896 ஏக்கர் நிலத்தில் செய்கை பன்னுவதற்காக 1435 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின்கீழ் 10மில்லியன் செலவில் 13 ஆயிரத்தி 700 கிலோகிராம் பயறு 1080 ஏக்கர் நிலத்தில் செய்கை பன்னுவதற்காக 1878 பயனாளிகளுக்கு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 3ஆயிரத்தி 313 பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ள விதைகளிலிருந்து இப்பரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக மாவட்டத்தினதும் நாட்டினதும் பொருளாதார வளர்சியில் பங்களிப்பு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
இதுதவிர மற்றுமொரு வேலைத்திட்டமாகிய உளுந்து, பயறு மற்றும் இஞ்சி உற்பத்திக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு இராஜாங்க அமைச்சர் வியழேந்திரனால் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்காக பிரதேச செயலகங்கள் வாயிலாக தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உளுந்து மற்றும் பயறு விதைகளுகம், 15 மில்லியன் பெறுமதியான இஞ்சி விதைக் கிழங்குகளும் வழங்கப்படவுள்ளன.