வரவு – செலவுத்திட்ட உரையைச் செவிமடுக்க சென்ற ஜனாதிபதி…
எதிர்வரும் 2022 நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட உரையைச் செவிமடுப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், இன்றைய தினம் (12) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.
சுதந்திர இலங்கையின் 76ஆவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையிலான அராசாங்கத்தின் 2ஆவதும் வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை, அவைத் தலைவர் தினேஸ் குணவர்தன, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, கஞ்சன விஜேசேகர, தேனுக்க விதானகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோர் வரவேற்றனர்.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அவர்கள், தனது வரவு – செலவுத்திட்ட உரையை ஆரம்பித்த போது, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுடன், ஜனாதிபதி அவர்கள் சபைக்குள் பிரவேசித்தார்.