இளைஞர் ,பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்கு காணி….
விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் சட்டம் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
மேலும், பயிர் செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்று (12) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, பால் உற்பத்தி தொடர்பான திட்டங்களை அதிகரிக்கும் நோக்கில் திரவ பால் பாவனையை அதிகரிப்பதற்காக ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.