மணிப்பூரில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்.. ராணுவ அதிகாரி, மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப்படை அதிகாரி, மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
துணை ராணுவப் பிரிவான அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் குகா படைப்பிரிவில் பணிபுரிந்து வந்தவர் கர்னல் விப்லவ் திரிபாதி. மணிப்பூரில் உள்ள ரைபிள்ஸ் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை 11 மணியளவில் தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அவர்களுடன் பாதுகாப்பு வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தது. அவர்கள் சென்ற கார் ஷெகென் கிராமத்துக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் கர்னல் விப்லவ் திரிபாதி, அவாரது மனைவி, மகன் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயமடைந்த 4 வீரர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரை சேர்ந்த மக்கள் விடுதலை தீவிரவாத அமைப்பு இந்த செயலில் ஈடுப்பட்டு இருக்கலாம் என அம்மாநில காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மணிப்பூர் – மியான்மர் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்னல் விப்லவ் திரிபாதி பட்டாலியன் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்திய – மியான்மர் எல்லையில் சட்டவிரோத ஆட்கடத்தலை தீவிரமாக கண்காணித்து அதனை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்