அருட்திரு. எட்மன் மைக்கல் இறைவனடி சேர்ந்தார்.

யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த மூத்த துறவிகளில் ஒருவரான அருட்திரு எட்மன் மைக்கல் அவர்கள் 13ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
50வருடங்களுக்கு மேலாக குருவாக இருந்து யாழ்ப்பானம் மன்னார் மறைமாவட்டங்களின் பல பங்குகளிலும் பங்குப்பணியாற்றி பலராலும் அதிகமாக விரும்பப்பட்டவர்.
எளிமையான தோற்றமும் இயல்பும் கொண்ட இவர் பங்குத்தளங்களில் இறை அழைத்தலை ஊக்குவித்து பல குருக்களை உருவாக்கியவர். ஆங்கில கல்வியை சிறந்த முறையில் கற்பிக்கும் நல்லாசானாக திகழ்ந்து மணவர்கள் பலரின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தவர்.