மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க ஞானசாரரின் செயலணி தீர்மானம்!
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும் இந்தச் சந்தர்ப்பத்தில், பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து யோசனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன எனவும் தேரர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தமது கருத்துக்களை ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, செயலாளர், தபால் பெட்டி- 504, கொழும்பு என்ற முகவரிக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அனுப்பலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.