இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
கொரோனாவினால் தற்போது வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை கருத்திற் கொண்டு கேகாலை பிரதான வைத்தியாலையின் இரத்த வங்கி பிரிவினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் நாட்டை கட்டியெழும்புவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கொட்டியாகும்புர வை. எம். எம். ஏ. கிளை மற்றும் கொட்டியாகும்புர யுனைட்டட் புவண்டேசன் ஆகிய இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் விநியோகித்தல் கொட்டியாகும்புர எம். ஆர். மண்டபத்தில் கொட்டியாகும்புர வை. எம். எம். ஏ. கிளையின் தலைவர் எம். ஏ. எம். அசாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி கலந்து கொண்டு சிறபித்தார்.
இந்நிகழ்வில் கொட்டிகும்புர இணக்க சபைத் தலைவர் போயகொட தேரர் பள்ளிவாசல் தலைவர் மற்றும் கேகாலை மாவட்ட வை. எம். எம். ஏ. பணிப்பாளர் லுக்மான், சமயத் தலைவர்கள் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கிய பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி பல்லின சமூகத்தைச் சேர்ந்த குறித்த எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்து இரத்த தானம் வழங்கி வைத்தனர். இரத்த தானம் வழங்கிய ஒவ்வொரு நபர்களுக்கும் மரக் கன்றுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
(இக்பால் அலி)