கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை…

உள்ளூர் பால் உற்பத்தியை விஸ்தரிக்கும் நோக்கில் 2,500 கறவைப் பசுக்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.
கறவைப் பசுக்களின் இறக்குமதிகளுக்காக 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் தலா 02 காணிகள் வீதம் 4 காணிகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளது.
கறவைப் பசுக்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளன.