வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது.

வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நிதி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 6 முதல் 7 மாதங்களுக்கு வாகன இறக்குமதி சந்தை திறக்கப்படாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.