தொடரும் சோதனை; மேலும் 86 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்றும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82 ஆயிரத்து 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.