இந்த அரசு கவிழ்ந்து விடுமா? : உபுல் ஜோசப் பெர்னாண்டோ

‘விமல், தயாராகு. நாங்கள் இருவரும் ஒன்றாக சிறைக்கு செல்ல வேண்டும்.

2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி கிருலப்பனை கூட்டத்தில் விமலைப் பார்த்து உரையாற்றும் போது மஹிந்த ராஜபக்ஷ கூறியது இதுதான்.

‘விமல் எங்கள் குடும்பத்தில் இன்னொரு சகோதரர்’

நாமல் ஒருமுறை விமலைச் சுட்டிக் காட்டி பேசியது இப்படித்தான்.

 எதிரிகள் விமலையும் ,   என்னையும் தாக்கினார்கள் . அந்த தாக்குதலில் எனக்கு அடுத்தபடியாக விமல்தான் இருந்தார்.

2020 பெப்ரவரி 23ஆம் திகதி விமலின் புத்தகம் வெளியான அன்று நாடு முழுவதும் கேட்கும்படி  மஹிந்த சொன்னது இது.

NUGEGODA 2015 TO NUGEGODA 2017

மெதமுலனையில்  உள்ள வீட்டு ஜன்னலில் மகிந்த ராஜபக்சவை  தொங்க வைத்ததாக  சொல்லி ஷம்பெயின் குடிக்க அமர்ந்திருந்தவர்கள் ஷம்பெயின் போத்தலை உடைப்பதற்குள்ளாகவே ,  விமல் மற்றும் அவரது குழுவினர் என்னை நுகேகொடைக்கு அழைத்து வந்தனர்.

புத்தகம் வெளியான அன்று மகிந்த கேகாலையில் வைத்து  பேசிய பேச்சு  இது.

‘அப்படியான விமல் மீது  ராஜபக்சக்களுக்கு  ஏன் இவ்வளவு சீக்கிரம் சலிப்பு ஏற்பட்டது?’
இந்தக் கதைக்கு  பிரபாகரனின் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர் ஒரு நல்ல பதிலைச் சொன்னார்.

‘பிரபாகரன் , கருணாவைக் கோபப்படுத்தாமல் இருந்திருந்தால் , பிரபாகரனை ஒருபோதும் போரில் தோற்கடித்திருக்க முடியாது. காலம் கெட்டுப் போனால், நண்பர்கள் கூட எதிரிகளாகத்தான் மாறுவார்கள்.

அவர் சொன்ன பதில் இதுதான்.

‘இன்று ராஜபக்சேக்களுக்கும் விமலுக்கும் நடப்பது, பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் நடந்ததா?’

 

எனக்கு தெரியாது. ஆனால், ராஜபக்சவுக்கும் விமல்லாவுக்கும் இடையிலான நட்பு 2005 முதல் தொடர்கிறது. வாசுதேவாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான நட்பு இன்னும் பழையது. விமலுக்கும் , உதய கம்மன்பிலவுக்கும் சுமார் 16 வருடங்களான நட்பு உண்டு. இந்த நட்பு சிதையத் தொடங்கியது  2021  எனும் வித்தியாசமான  எண்ணில் ஆகும்.

2021 எனும் இறுதியில் 1 ல் முடியும் எண் உள்ள ஆண்டில் ஏற்படுவது போல , இலங்கையின் முதல் அரசியல் சிதைவு  1951ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
1951 இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் ,   அரசாங்கத்திலிருந்தும் விலகி 1951 இல் எதிர்க்கட்சியில் இணைந்தார்.

1951 செப்டம்பரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்க உருவாக்கினார்.


மஹிந்த , கோத்தபாய , பசில் ஆகியோரின்  தந்தையான D.A.ராஜபக்ச ,  பண்டாரநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்தபோது, ​​1951 இல் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.

அப்போது பண்டாரநாயக்கா எதிர்க்கட்சியில் இணையாமல் இருந்திருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒரு கட்சியே உருவாகி இருக்காது.

திருமதி பண்டாரநாயக்கா உலகின் முதல் பெண் பிரதமரும்  ஆகி இருக்க மாட்டார்.

அந்த நேரத்தில் டி.ஏ. ராஜபக்ச ,  பண்டாரநாயக்காவோடு செல்லாமல் இருந்திருந்தால், மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராகவும் வந்திருக்கமாட்டார், ராஜபக்சேக்கள் நாட்டை அசைத்திருக்கவும் மாட்டார்கள்.

ஆனால் 1951 ,  இலங்கையின் அரசியல் சூத்திரத்தை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மாற்றியது.

அடுத்து 1991 வருகிறது.

அதுவும் செப்டம்பர் 1991. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்த ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு   அரசாங்கத்திற்குள் இருந்தே ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்துக்கு வந்தது.

1991 செப்டம்பரில்  அப்போதைய பிரமதாச ,  ஜனாதிபதியாகி ஜே.வி.பி. பயங்கரவாதத்தை அடக்கி, 1991 மார்ச்சில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார்,
இன்னும் பல தசாப்தங்களுக்கு 
எதிர்க்கட்சியினர் தலை தூக்க முடியாதபடி  ஆக்கியிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திருமதி. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா  உடல் நலக்குறைவு ஏற்பட்டு ,  சக்கர நாற்காலியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டடிருந்தார்.

அந்நேரம்  அவருக்கும்,   அநுர பண்டாரநாயக்கவுக்கும் , லண்டனில் இருந்து வந்திருந்த சந்திரிகாவுக்கும் இடையே கட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்ற முக்கோணப் போர் ஒன்று ஆரம்பித்தது.
பிரேமதாச அரசாங்கம் வீழ்ச்சியடையாது என எதிர்க்கட்சிகள் நினைத்திருந்த வேளையிலேயே லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க  பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்தனர்.

உண்மையில் ஒருபோதும் தோற்கடிக்க முடியாத வகையில் ஜே.ஆர்.  உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி  அதிலிருந்து சிதறத் தொடங்கியது.

1994  ஸ்ரீ.ல.சு.க. மீண்டும் ஆட்சியைப் பெற்றிருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நேரத்தில் அந்த சிதறலால் ஐதேக தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீ.ல.சு.க. வெற்றி பெற்றது.

அப்படித்தான் 1991ல் இலங்கையின் பழைய அரசியல் முறை அழிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

1991க்குப் பின்னர், 2001 பெரும் அரசியல் புயலொன்று அடித்தது.

ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிகாவின் அரசாங்கத்திற்குத் தேவையான பாராளுமன்றப் பெரும்பான்மையை வழங்கியிருந்த வேளையில் , அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா திடீரென ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கினார். ஹக்கீம் எதிர்க்கட்சிக்கு சென்றார். சந்திரிகாவின் அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்தது.

ஐ.தே.க தலைவர் ரணில் ஹக்கீமுடன் இணைந்து சந்திரிகாவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோல்வியடையும் என்பதை அறிந்த சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அரசியலமைப்பை மாற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முற்பட்டார்.

பின்னர் அது ரத்து செய்யப்பட்டு ஜே.வி.பி உடன் ஒரு இடைக்கால அரசை அமைத்தார். இடைக்கால அரசு ஏற்படுவதற்கு  முன்னர் சந்திரிகாவுடன் பிரச்சினைகளை எதிர்கொண்ட கட்சியின் செயலாளர் எஸ்.பி., ஜீ.எல், மஹிந்த விஜேசேகர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று சந்திரிகாவின் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டனர். சந்திரிகாவும் அரசாங்கமும் சோர்ந்து போய் தோல்வியடைந்தது.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தோல்வியடைந்த ஐ.தே.கட்சிக்கு , 1991ஆம் ஆண்டு அரசாங்கத்திற்குள் சந்திரிகா மேல் ஏற்பட்ட எதிர்ப்புக்களால் புதிய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு ஐதேகவுக்கு கிடைத்தது.

1951, 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில்   அரசு வீழ்ச்சியடைய,  தலைவர்களுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் நடந்த கிளர்ச்சிகளே காரணமாயின.
‘அப்படியானால் 2021-லும் இதேபோன்ற எழுச்சி ஏற்படுமா?’

அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனினும் இலங்கை அரசியலில் முதலாவது ஆயுத கிளர்ச்சி 1971 இல் தொடங்கியது.

1971 ஆம் ஆண்டு எழுச்சியும், 1970 ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்குள் ,  ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட இடதுசாரி இளைஞர்களின் எழுச்சியும் ஒரு கிளர்ச்சியாகும். சமகி பெரமுன அவர்கள் எதிர்பார்த்த சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்தத் தவறியதால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் விஜேவீரவின் ஜே.வி.பி.யில் இணைந்தனர்.

நாட்டில் சோசலிசத்தை கொண்டு வருவோம் என உறுதியளித்த இடதுசாரி கட்சிகளை  விஜேவீர,  மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விமர்சித்தார். ஜே.வி.பி. இளைஞர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிய திருமதி பண்டாரநாயக்கா எடுத்த முதல் நடவடிக்கைகளை மக்கள் வெறுக்க ஆரம்பித்ததோடு , 1971 இளைஞர்களது ( JVP) புரட்சி ஆரம்பமானது.

எனவே, 1951, 1991 மற்றும் 2001, அதே போல் 1971, ஒரு அரசாங்கத்தை அல்லது ஒரு ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டு வரும் தலைவர்கள் அல்லது குழுக்களின் அபாய நிலைக்கு தள்ளிய காலமாகும்.

Srimawo Bandaranayake

ஶ்ரீமாவோபண்டாரநாயக்கா இக்கட்டான நிலைக்குள் 1951 இல் தள்ளப்பட்டார். 1991ல் லலித், காமினி ஆகியோரின் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் . 2001ல் சந்திரிகாவின் வாக்கு சேகரிக்கும் இயந்திரங்கள் போல செயல்பட்ட , எஸ்.பி. திசாநாக்க , ஜி.எல்., ஆகியோர் சந்திரிகாவை இக்கட்டான நோக்கி தள்ளினர்.

1971 இல், நாட்டில் சோசலிசத்தின் விடியலுக்காகக் காத்திருந்த இளைஞர்களின் அபாய நிலை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியது. ராஜபக்சக்களால் முடிசூட்டப்பட்ட விமல், உதய, வாசுஆகியோரின் அபாய போக்குகள் 2021ல் எகிறி அரசை இக்கட்டான நிலைக்கு தள்ள  ஆரம்பித்துள்ளது.

‘விமலின் அரசியல் முடிந்து போகுமா?’

அதற்கு மகிந்த ராஜபக்ச சிறந்த பதிலை அளித்துள்ளார். அது விமலின் புத்தகம் வெளியான அன்று சொன்னதுதான் . அப்போது மஹிந்த சொன்னது இதுதான்……

“2008ஆம் ஆண்டுக்கு முன்னர், ஜே.வி.பி., விமலால் வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த போது, ​​விமலையும், ஜே.வி.பியையும் தாக்க எதிரிகள் இருந்தனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. 2008ஆம் ஆண்டு ஜே.வி.பியில் இருந்து விமல் வெளியேறிய போது, ​​பொதுவெளியில்  ஜே.வி.பியை தாக்கிய எதிரிகள் எல்லோரும் மகிழ்ச்சியில் பால் சோறு சாப்பிட்டார்கள். இனி விமலின் தொல்லைகள் முடிந்துவிட்டதாக நினைத்து ஜேவிபியை தாக்குவதை அவர்கள் நிறுத்தினர். ஆனால் விமல் தனக்கென ஒரு கடமை இருப்பதாக நினைத்து அந்தக் கடமையை செய்யத் தொடங்கிய போது ,  முன்னைய எதிரிகளும் ,  விமல் பிரிந்து வந்த ஜே.வி.பியினரும் ,   இரு பகுதியினராக சேர்ந்து கொண்டு மீண்டும் விமலை தாக்க ஆரம்பித்தனர்.

எத்தனை தாக்குதல்கள் வந்தாலும்  கடமையை விட்டுக்கொடுக்காத ஒரு அரசியல்வாதி என்றால் , அதற்கு மிகவும் பொருத்தமானவன் நானாக இருப்தாக நினைக்கிறேன். அதற்கு அடுத்ததாக  இரண்டாவது நிலையில்   , எனக்கு  தெரியும்  நிலையில் இருப்பவர் விமல் என்றே நினைக்கிறேன்.

  • உபுல் ஜோசப் பெர்னாண்டோ
  • தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.