அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக இயங்கும்.

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக இயங்கும் என கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்..
தற்போது, ஆரம்பப் பிரிவு மற்றும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.