சுப்பர் மார்க்கட்டில் பண மோசடி; பணியாளர்கள் ஐவர் மாட்டினர்!
நான்கு மாதங்களுக்கு மேலாகப் பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கம்பளை நகரில் பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்றின் பணியாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளை – மலபார் வீதியில் அமைந்துள்ள குறித்த சுப்பர் மார்க்கட்டின் உரிமையாளர், கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சனக் கூட்டமான நேரங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யவரும் பல வாடிக்கையாளர்களுக்கு ரசீத்தைக் கொடுக்காது, பொருள்களைக் கொடுத்தே மேற்படி ஐவரும் பணமோசடி செய்து வந்துள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவதுள்ளது
ரசீத்துகள் கொடுக்காமை குறித்து வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுப்பர் மார்க்கட் உரிமையாளருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பாதுகாப்பு கமராக்களைச் சோதித்துப் பார்த்தபோதே, மேற்படி பண மோசடி குறித்து தெரியவந்ததையடுத்து உரிமையாளரால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில பண்டாரவின் ஆலோசனைக்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரைணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.