60 வயதைத் தாண்டியவர்களுக்கு இன்று தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி….

இலங்கையில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான பூஸ்டர் என்ற 3 ஆவது கொரோனா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகிறது.
இரண்டாவது தடுப்பூசியை ஏற்றி 3 மாதங்கள் பூர்த்தியடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதுவரை பத்து இலட்சம் பாடசாலைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 480 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகளை ஒருசில நாடுகளே ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கக் கிடைத்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.