யாழ்ப்பாணம் மாநகரசபையில் 15 பேருக்கு கொரணா தொற்று.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாநகரசபை ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.