ஆட்சியை விரட்டியடிப்போம்! – சம்பிக்க சூளுரை.
ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டு மக்களைத் துன்பத்துக்குள் தள்ளிய, தேசிய வளங்களை விற்பனை செய்த, அதேபோல் எதிர்காலத்தில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.
இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும்” – என்றார்.
அத்துடன், இது ஆரம்பம் மட்டுமே, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகர்வுகள் அதிரடியாக இருக்கும். மக்களுடன் அரசு விளையாட முடியாது என்று போராட்டத்தில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன எம்.பி. தெரிவித்தார்.