அரசியலில் இருந்து ஓய்வுபெற மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் புத்த பெருமான் விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைக்கவுள்ளார்.

இது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இது பௌத்த பெருமானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ருவன்வெளியாவில் சேர்க்கப்படாது என்ற கருத்தும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்தநிலையில், குறித்த விகாரையை திறந்துவைத்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வுபெற மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமரின் உடல் நிலை மோசமாகி வருவதால் இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்தநிலையில், பிரதமர் பதவிக்கு பஸில் ராஜபக்சவை அல்லது நாமல் ராஜபக்சவை நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது எனப் பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.