மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து!

மட்டக்களப்பு – சந்திவெளி சித்தாண்டியில் பஸ் ஒன்றுடன் முச்சக்கரவண்டிமோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பகல் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று, சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.