மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்!

நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செப்பல்டன் தோட்டத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 25, 31 வயதுகளையுடைய இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.