கோட்டாபய ராஜபக்க்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்று 02 வருடங்கள் பூர்த்தி.
கோட்டாபய ராஜபக்க்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 52 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பெரு வெற்றியீட்டினார்.
நாட்டின் 7வது ஜனாதிபதியான இவர், 2019ம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக பல திட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் இரசாயன உரங்களினால் ஏற்படும் தீங்கினை இல்லாது செய்வதற்கு சேதனப் பசளைப் பயன்பாட்டை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.