டிவிலியர்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் பெங்களூரு அணியின் வீரருமான டிவிலியர்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் டிவிடி அரசை பெங்களூரு அணி நிர்வாகம் நிச்சயம் தக்க வைத்துக் கொள்ளும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்று திடீரென ஓய்வை அறிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள டிவில்லியர்ஸ் தனக்குள் இருக்கும் ஜோதியை முன்பு போல பிரகாசமாக எரியவில்லை என்று கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக டிவிலியர்ஸ் விளையாடியுள்ளார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதிப் போட்டி வரை உலக கோப்பையில் அழைத்துச் சென்றார் டிவில்லியர்ஸ்.
இவர் விளையாடும் ஆட்டத்தை பார்க்கவே தனி ரசிகர் படை உண்டு. கால்களை வலதுபுறம் இடதுபுறம் என்று நகற்றி நகற்றி வித்தியாசமான முறையில் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிடும் இவரது ஆட்டத்தை எதிரணி ரசிகர்களே விரும்பி பார்ப்பது வழக்கம்.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக இதுவரை 170 இன்னிங்ஸ்களில் 5162 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் 251 சிக்சர்களையும் விளாசியுள்ளார். நீண்ட காலமாக விராட் கோலியுடன் நுழைந்து பெங்களூரு அணியின் பேட்டிங்கில் தாங்கி வந்த டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்க நாட்டு ரசிகர்களை விட பெங்களூரு அணி ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. டிவிலியர்ஸ் ஓய்வை அறிவித்து விட்டதால் பெங்களூரு அணி வரும் ஐபிஎல் தொடருக்கு எந்த நான்கு வீரர்களை தக்க வைக்கும் என்பதில் ரசிகர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விராட் கோலி நிச்சயமாக தக்க வைக்கப்படுவார் என்பது தெரியவருகிறது. கூடவே அந்த அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பேட்டிங்கில் பங்காற்றிய தேவ்தூத் படிக்கல் தக்க வைக்கப்படலாம். மேலும் நீண்ட நாட்களாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சு முகமாக விளங்கும் சஹால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்கு விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வீரராக கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயலாற்றிய ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தக்க வைக்கலாம்.
எந்த ஒரு சிறப்பான வீரரை அடுத்த ஆண்டு ஏலத்தில் பெங்களூரு அணி எடுத்தாலும் ஏபிடி வில்லியர்ஸ் விளையாடி ஏற்படுத்திய தாக்கத்தை எந்த ஒரு வீரரும் இனிமேல் ஏற்படுத்த முடியாது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்