“கோட்டாவால் உள்ளூராட்சி சபையைக் கூட நடத்த முடியாது: மக்கள் பைத்தியக்காரன் என்கின்றனர்.” : குமார வெல்கம (வீடியோ)
ஈஸ்டர் தாக்குதலின் முடிவுகள் மிகவும் மோசமானதாக திருப்பி தாக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் இன்று பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சட்டத்திலிருந்து ஒருவர் தப்பித்தாலும், கடவுளிடமிருந்தும், பிரபஞ்சத்திலிருந்தும் யாரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவின் வேட்புமனுவை தாக்கல் செய்ய முற்பட்ட போது , தான் அதை எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பிரதேச சபையை கூட ஆட்சி செய்த அனுபவம் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும், அவருக்கு ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது தெரியாது எனவும், தான் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தின் ஒரு பகுதியை மாத்திரமே கட்டுப்படுத்தும் திறன் கோத்தபாய ராஜபக்சவுக்கு இருப்பதாகவும்,அவர் அமெரிக்காவில் உள்ள பெற்றோல் செட்டில் , கணினி இயக்குபவராக மாத்திரமே செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வெல்கம , விவசாயிகள் தனக்கு ஒரு மூடை உரத்தை பெற்று தருமாறு தன்னிடம் கையேந்துகிறார்கள் எனவும் அவர்கள் அரசை சபிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நடத்திய ஆர்பாட்டத்தை தடுக்க அரசு முயற்சித்ததில் , எதிர்க்கட்சிக்கு பாரிய வெற்றி என தெரிவித்த வெல்கம , ஒரு இடத்தில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை நாட்டின் 15 பகுதிகளுக்கு மேல் நடத்த வழி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
வெல்கமவின் சிங்கள பாராளுமன்ற உரை: