2021ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய “Password” இது தான்! இப்படி ஒரு சுவாரஷ்யம் இருக்கா?
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் தினசரி பல வெப்சைட்கள், ஆப்ஸ்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இவற்றை பாதுகாப்பாக செயற்படுத்துவதற்கு பாஸ்வேர்ட்கள் உதவுகின்றன.
இந்த நிலையில் அண்மையில் நடந்த ஆய்வுகளின் எப்படியான Password அதிகம் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.
NordPass நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் பொதுவாக மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் “password” தான் என்பதே வேடிக்கை.
இந்தியா முழுவதும் password என்பதையே பாஸ்வேர்ட்டாக சுமார் 1,714,646 பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியாவில் மட்டுமல்ல , ‘password’-ஐயே பாஸ்வேர்ட்டாக நிறைய மக்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இதை கிராக் செய்ய ஒரு வினாடிக்கும் குறைவாகவே ஆகும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கை.
இதற்கு அடுத்து இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் இரண்டாவது பாஸ்வேர்ட்டாக இருக்கிறது ‘12345’. இதை பாஸ்வேர்ட்டாக சுமார் 1,289,266 இந்தியர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பாஸ்வேர்ட்டையும் ஹேக்கர்ஸ் உடைக்க ஒரு நொடி கூட ஆகாது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் ‘123456’ ஆகும்.
password மற்றும் 12345 இவற்றை தவிர இந்தியர்கள் பயன்படுத்தும் சில பொதுவாக பயன்படுத்தி வரும் சில பாஸ்வேர்ட்கள் 123456, 123456789, 12345678, 1234567890, 1234567, qwerty, abc123 ‘india123’, ‘xxx’, ‘iloveyou’, ‘krishna’ மற்றும் ‘omsairam’ உள்ளிட்டவையாக இருக்கின்றன.
இதில் “india123” என்பதை தவிர மற்ற அனைத்து பாஸ்வேர்ட்களும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கிராக் அதாவது சிதைக்கப்படும் என்று NordPass தெரிவித்துள்ளது.
India123-ஐ கிராக் செய்ய குறைந்தது 17 நிமிடங்கள் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர அதிக மக்கள் தங்கள் பெயர்களையே பாஸ்வேர்ட்களாக பயன்படுத்த விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே NordPass-ன் CEO ஜோனாஸ் கார்க்லிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாஸ்வேர்ட்கள் நமது டிஜிட்டல் வாழ்க்கைக்கான நுழைவாயில் என்பதை புரிந்து கொள்வது அவசியம்.
நாம் ஆன்லைனில் அதிக நேரத்தை செலவிடுவதால், நம் இணைய பாதுகாப்பை சிறப்பாக கவனித்து கொள்வது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.