உரம், மருந்து பெற்றுத் தரக் கோரி ஆர்ப்பாட்டம்.

விவசாயத்திற்கான உரம்,மருந்தை தடையின்றி வழங்குமாறு கோரி நுவரெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
விவசாயிகளின் அவசரத் தேவையையும், உரத்தட்டுப்பாட்டையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர். “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாய செலவுகளுக்கு இடையில் உரத் தட்டுப்பாடாலும், விலையேற்றத் தாலும், விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொது மக்களின் தேவைக்கு ஏற்ப அரசு காலதாமதமின்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி உரம், மருந்து கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறும் வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டம் பதுளை பிரதான வீதியிலுள்ள காமினி பாடசாலைக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பழைய கடை வீதியூடாக நுவரெலியா பிரதான தபால் நிலையம் வரை ஊர்வலமாக வந்தடைந்தது.
நுவரெலியா நகரிலுள்ள வியாபார நிலையங்களைப் பூட்டி போராட்டத்துக்கு ஆதரவை வழங்கினர்.
மேலும் போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டிய வண்ணம் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதை களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.