மத்திய வங்கிக்கு நான்கு புதிய உதவி ஆளுநர்கள் நியமனம்….

இலங்கை மத்திய வங்கி நான்கு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற நாணயச் சபைக் கூட்டத்தில், மத்திய வங்கியின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவி ஆளுநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கே. ஜி. பி. சிறிகுமார, டி. குமாரதுங்க, யு. எல். முதுகல மற்றும் சி. பி. எஸ். பண்டார ஆகியோர் 2021 நவம்பர் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.