கூலி கேட்டதற்காக தொழிலாளியின் கைகளை வெட்டிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

மத்தியப்பிரதேசத்தில் கூலி கேட்தற்காக தொழிலாளியின் கைகளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 45) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கணேஷ் மிஸ்ரா என்பவர் வீட்டிற்கு கட்டட வேலைக்கு சென்றுள்ளார். கூலியாக ரூபாய் 15000 பேசப்பட்டுள்ளது. வேலையை செய்துக்கொடுத்ததும் ரூபாய் 6000 மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணத்தை சில நாள்கள் கழித்து வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து நவம்பர் 20-ம் தேதி வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அசோக் தனது சகோதரன் சிவகுமாருடன் அங்கு கணேஷ் மிஸ்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போத வீட்டில் செய்த வேலை தொடர்பாக கணேஷ் மிஸ்ராவுக்கு- அசோக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீது பணத்தை கொடுங்கள் என அசோக் கராராக கேட்டுள்ளார். பணம் தானே இதோ தருகிறேன் என வீட்டிற்குள் சென்ற கணேஷ் மிஸ்ரா அங்கிருந்து ஒரு பெரிய வாள் எடுத்துவந்துள்ளார்.

வாளை எடுத்து அசோக்கின் கழுத்தை சீவுவது போல் சுழற்றியுள்ளார். அசோக் தனது இடதுகைகளை கொண்டு தடுத்துள்ளார். இதில் அவரது கை துண்டானது. உடனடியாக அங்கிருந்து அசோக் மற்றும் அவரது சகோதரர் இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு விட்டனர். நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாடகை கார் எடுத்து வந்து பாதி வழியிலே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அசோக் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணேஷ் மிஸ்ராவை கைது செய்ய போலீஸார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். கணேஷ் கையில் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டில் இருந்த ரத்தக்கறையை அப்புறப்படுத்த அவரது உறவினர்கள் இருவர் உதவி செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் மீது கொலை முயற்சி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் எஸ்.சி/ எஸ்.டி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காயம்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கைகள் பழைய படி இயங்குமா என்பது நான்கு நாள்கள் கழித்துதான் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.