பாலாற்றில் வெள்ளம்.. தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் பாலாற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் தொடர் கனமழை காரணமாககுடியாத்தம்,ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் பள்ளிகொண்டா பகுதியை ஒன்றாக இணைத்து விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆற்றின் கரையோரம் இருக்கும் காமராஜபுரம் என்னும் கிராமத்தில் ஒரு தெருவில் உள்ள வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டின் பின்பகுதி அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக க்ரையோரம் வசித்து வந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.