ஜெய் பீம் சர்ச்சை.. பிரபல நடிகர் சூர்யாவுக்கு எதிராக ஒன்று திரண்ட கிராமம்! நடந்தது என்ன?
ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையால் ஒரு கிராமமே சூர்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளதாக காரசாரமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
இப்படம் வெளியானதில் இருந்து இப்போதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ருப்பினும் இப்படத்தில் சில காட்சிகளில் வன்னியர்களை மையப்படுத்தி கூறியுள்ளதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கும் சூர்யா பதிலளித்துள்ளார்.
ஆனாலும் சூர்யாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதனை கிராமத்தில் உள்ள மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வன்னியர்கள் குறித்து தவறாக காட்சிபடுத்தி இருப்பதால் சூர்யா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கோஷங்களுடன் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொலிசார் சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.
இப்படம் வந்து இத்தனை நாள் ஆகியும் இதுகுறித்து யாருமே பேசப்படாத நிலையில் கிராம மக்கள் திடீரென இன்று குற்றஞ்சாட்டி போராட்டம் செய்ய என்ன காரணம்? இது யாருடைய தூண்டுதல்? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர்.