கொரோனாவோடு அட்மிட் ஆன கமல்ஹாசன்..
“சுவாச பாதை தொற்று” கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு இடையில் சமீபத்தில் பல்வேறு பணிகளுக்காக இவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ட்வீட்
கமல்ஹாசன் இதுகுறித்து செய்துள்ள ட்வீட்டில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனை
இதையடுத்து கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
உடல்நிலை எப்படி
இவரின் உடல்நிலை குறித்து சென்னையில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலுக்கு சுவாச பாதை தொற்று மற்றும் காய்ச்சல் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இருப்பினும் அவர் சாதாரண நிலையில் உள்ளது, என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது அவரின் உடல்நிலை மோசமடையவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மோசமில்லை
பொதுவாக கொரோனா நோயாளிகள் பலருக்கு சுவாச பாதை தொற்று ஏற்படும். அது கமல் ஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.